
ஒரு பிடி சாம்பலாய் மலர் சுமந்து கரைந்தகல்வேன் நிழலை மட்டும் சட்டத்துள் விட்டு விட்டு.. பின் எப்போதாவது வந்து செல்வேனாயிருக்கும் ஒரு தீற்றலாய் உற்றார் மனதில் மேலதிகமாய் மற்றும் ஒன்றாய் இங்கும் ஒரு சொல்லாய் ஆக நாளெல்லாம் தவிக்கிறேன் தவமென்றே வாழ்கிறேன்