எப்போதைக்கும்

ஒரு துளி
இட்ட
பின்

எப்போதைக்குமாய்
அருந்த முடிவதில்லை
அதை

அதுவாகத் தோன்றும்
எதையும்

விடம்
கலப்பது

பாலில் மட்டுமாக
எப்போதுமே
இருப்பதில்லை