அஷ்டபதி 11-ரதி ஸுக ஸாரே..(தீர ஸமீரே..)

பூர்வம் யத்ர ஸமம் த்வயா ரதிபதே: ஆஸாதிதாஸ்ஸித்தய:
தஸ்மின்னேவ நிகுஞ்ஜமன்மத மஹாதீர்த்தே புனர்மாதவ:
த்யாயன் த்வாம் அனிஸம் ஜபன்னபி தவைவாலாப மந்த்ராவலிம்
பூயஸ்த்வத் குசகும்ப நி்ர்பர பரீரம்பாம்ருதம் வாஞ்சதி

முன்பு நீயும் கிருஷ்ணனும் சேர்ந்து எந்தக் குடிலில் இருந்தீர்களோ, எங்கு ரதியின் பதியான மன்மதன் தன் ஆற்றல்களை பூரணமாகப் பெற்றானோ, எது மன்மதனின் தீர்த்தஸ்தானம் எனப்படுகிறதோ, அங்கு மீண்டும் மாதவன் உன்னையே இடைவிடாது தியானித்துக் கொண்டும், நீ முன்பு சொன்ன சொற்களையே மந்திரம் போன்று மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டும், உன் ஆலிங்கனம் என்னும் அமுதத்தை விரும்புகிறான்

ரதி ஸுகஸாரே கதமபி ஸாரே மதன மனோஹரவேஷம்
நகுரு நிதம்பினி கமன விளம்பனம் அனுஸர தம் ஹ்ருதயேஸம்

ரதி ஸுகம் கொள்வதற்கு ஏற்றதாகக் குறிக்கப்பட்ட அவ்விடத்திற்கு சென்றுள்ள, மன்மதனைப் போல வேடம் பூண்டுள்ள, உன் மனத்தின் தலைவனான கிருஷ்ணனை தொடர்ந்து செல்; அழகிய இடுப்பை உடையவளே, செல்வதில் தாமதம் செய்யாதே

தீரஸமீரே யமுனாதீரே வஸதி வனே வனமாலீ
கோபீபீனபயோதர மர்த்தன சஞ்சல கரயுகசாலீ

மெதுவாய் காற்று வீசும் யமுனையின் தீரத்திலுள்ள வனத்தில், கோபிகைகளோடு விளையாடும் கைகளிரண்டு கொண்டவனான வனமாலி இருக்கிறான்

நாமஸமேதம் க்ருத ஸங்கேதம் வாதயதேம்ருது வேணும்
பஹுமனுதே தனுதே தனுஸங்கத பவனசலிதமபி ரேணும் (தீர)

உன் பெயரைச் சொல்லி, தான் இருக்கும் இடத்தை உனக்குத் தெரியப்படுத்துவது போல மென்மையாக தன் குழலில் வாசிக்கிறான்; உன் மேனியிலிருந்து காற்றினால் அசைக்கப்பட்ட சிறு துகளைக் கூட பெரிதாக நினைக்கிறான் (தீர)

பததி பதத்ரே விசலதி பத்ரே ஸங்கித பவதுபயானம்
ரசயதி ஸயனம் ஸசகித நயனம் பஸ்யதி தவ பந்தானம் (தீர)

பறவையின் ஒரு இறகு உதிரும்போதோ, இலைகள் சரசரக்கும் போதோ, நீ அருகில் வந்து விட்டாயோ என்ற சந்தேகத்தில் மெத்தையை விரிக்கிறான்; நிலைகுத்திய கண்களோடு நீ வரும் பாதையை பார்த்திருக்கிறான்(தீர)

முகரமதீரம் த்யஜ மஞ்ஜீரம் ரிபுமிவ கேளிஷுலோலம்
சலஸகி குஞ்ஜம் ஸதிமிர புஞ்ஜம் ஸீலய நீல நிசோளம் (தீர)

கேளியின் போது அசைந்து அதிகமாக சப்தம் செய்யும் உன் காற்சலங்கையை, எதிரியாக நினைத்து கழற்றி விடு; தோழி, இருண்டு, நிழலில் இருக்கும் அக்குடிலுக்கு, நீல நிற சால்வையை போர்த்திக் கொண்டு செல்(தீர)

உரஸி முராரே உபஹிதஹாரே கனயிவ தரளபலாகே
தடிதிவ பீதே ரதிவிபரீதே ராஜஸி ஸுக்ருத விபாகே (தீர)

முராரியின் மார்பில் உள்ள முத்து ஹாரங்கள், கருமேகத்தின் மேல் பறக்கும் கொக்கைப் போல காணப்படுகின்றன; மஞ்சள் நிறத்தில் இருப்பவளே, உன் தவப் பயனால், ரதி விளையாட்டின் போது நீ அவன் மார்பில், மேகத்தின் மீது காணப்படும் மின்னலைப் போல ஜொலிப்பாய் (தீர)

விகளிதவஸனம் பரிஹ்ருதரஸனம் கடயஜகனமபிதானம்
கிஸலய ஸயனே பங்கஜ நயனே நிதிமிவ ஹர்ஷ நிதானம் (தீர)

தாமரை போன்ற கண்களை உடையவளே, தளிர்களால் ஆன மஞ்சத்தில், இடையாபரணம் கழன்றதால், தளர்ந்த ஆடையுடன் இருக்கும் நீ, உன்னையே பெருமகிழ்ச்சியை வழங்கும் பொக்கிஷத்தைப் போல சமர்ப்பிப்பாயாக (தீர)

ஹரிரபிமானீ ரஜனிரிதானீம் இயமுபயாதி விராமம்
குரு மம வசனம் ஸத்வர ரசனம் பூரய மதுரிபு காமம் (தீர)

ஹரியோ மானமுள்ளவன், இந்த இரவும் இப்போது தீர்ந்து விடப் போகிறது; என் வார்த்தைகளை விரைவாக செயலாக்கு; மதுவின் எதிரியான கண்ணனின் காமத்தை பூர்த்தி செய் (தீர)

ஸ்ரீஜயதேவே க்ருதஹரிஸேவே பணதி பரமரமணீயம்

ப்ரமுதித ஹ்ருதயம் ஹரிமதிஸதயம் நமத ஸுக்ருதகமனீயம் (தீர)

ஸ்ரீ ஜெயதேவரால் ஹரிக்கு செய்யும் சேவையாக சொல்லப்பட்ட இந்த மிக இனிய சொற்களைக் கொண்டு, நற்தவப் பயனாக, தயை நிறைந்தவான ஹரியின் மனத்தை மகிழச் செய்ய, அவனை வணங்ககுங்கள்