தூயதொன்று..

கரும் பலகையில்
வெள்ளித் தீற்றலாய்
அலைகளுக்கொளியூட்டி
நீண்டு
என் திரை வழி
எட்டிப் பார்த்தாள்

நான் விழித்திருக்க
திகைத்து விட்டாள்

'மனிதக் கண்களுக்கானதன்று..'

நாணிக்
கண் புதைத்து
மெல்லப் புன்னகைத்தாள்

பித்து 
மாயை 
போதையூட்டி

பின்
எப்போதைக்குமாக
கடந்து சென்றாள்