
அடர் கருப்பில் ஒன்று பச்சைக் கண்கள் ஒளிர பழுப்பில் சாம்பலில் ஒவ்வொன்று தரையில் படுத்த படி வெள்ளையில் ஒன்று அங்கங்கே கருந் தீற்றலோடு சூலியாய் பருத்திருந்த ஒன்று அமர்ந்திருந்தது பாம்பென வால் தரையில் படிய மற்றொன்றினுடையது கேள்விக் குறியாய் போகும் வரும் அனைவரையும் பார்த்தபடி எது எழுந்து யாரோடு செல்லும்.. எங்கனம் முடிவு செய்கின்றன இவரென்று நடையைப் பார்த்தா எதையும் பார்க்காமலேயா..