சங்கமம்

நதிகள்
ஒன்றையொன்று
நோக்கி 
பாய
ஆரம்பிக்கும் போதே
முடிவு செய்து விடுகின்றன

தத்தம் தண்மையின்
தத்தமது பள்ளங்களின்

சங்கமத்தை

அது வரை சுமந்து வந்த
பூக்களோடும்

மூன்றாவது படித்துறையில்
இழுத்து விடப்பட்ட
பாதி எரிந்த
உடலோடும்