அத்தனை ஆடிகள்..

அச்சுவர் முழுதும் ஆடிகள்

ஒன்று சிறியதாய்
ஒன்று பெரியதாய்
ஒன்று கையளவே
ஒன்று சுவரளவு

வட்டம்
சதுரம்
நீள் சதுரம்

பல வடிவங்கள்
பல சட்டங்கள்

சிப்பிகள் கற்கள் முத்துகள் இறகுகள் கூட

நாளும் பொழுதும்
ஒவ்வொன்றிலாய்
அவன்
தன்னைப்
பார்த்துக் கொண்டான்

வித வித
சட்டகங்களில்
வித விதமான
ஒற்றை முகம்

அத்தனை ஆடிகளில்
ஒன்றாவது
வெற்றி கண்டதா