
முடிவற்ற அவ்வடுக்கிலிருந்து ஒன்றுக்குள் பொருத்த சரியான மற்றொன்றை தேடித் தேடிச் சலித்தது அக்குழந்தை ஒன்று கொஞ்சம் நீட்டமாய் ஒன்று சில துளி குறைவாய் சிலது வடிவமே வேறொன்றாய் சிலது உள் நுழையவே முடியாது சேர்ந்த பின்னும் சில விபரீதமாய்த் தோன்ற முற்றிலும் கலைந்து கிடந்ததைக் கண்டு திகைத்து நின்றது கரத்தின் ஒரே வீச்சில் குழிகளனைத்திலும் புடைப்புகள் சென்றமைய புதிய சித்திரமென்றுருவாகும் அரைக்காலுக்கும் குறைவான மாய நொடியொன்று அமையப் போகும் இரகசியத்தை அறியாது..