தவிப்பு

ஆளுயர அலை மேலேறி

விழுங்க வரும் அலைவாயின் 
நா தொடும் முன்

சிலுசிலுக்கும் சிற்றலையின்
மீதமர்ந்த
செல்லச் சிணுங்கலாய்

எப்படியெப்படியோ

கிடைத்த
வாகனமேறி

அன்றன்றுக்காய்

மீண்டும் மீண்டும்

சொல்லாகிறது

ஆழ்கடலின்
அகத் தவிப்பு