வட்டமில்லையென..

வேறோருலகில்
மற்றொரு பார்வையில்
நறுமணம் கொள்ளும் 
அது

என் சிறகசையும் வெளியில்
என் கண்ணெட்டும் தொலைவில்
என் சின்ன உலகில்
எனக்கென 

இங்கனம்
திகைந்துள்ளது

பேரிருப்பின் 
சிறு துளியாய்
என்
பரபக்கமாய்

என்னை
மூழ்கச் செய்துள்ள
என் 
இச்சிறு துளி

வட்டமாய்
இல்லை இல்லையென
எத்தனை முறை சொன்னால்
இது வட்டமில்லையென
நீ
ஏற்றுக் கொள்வாய்