அஷ்டபதி-9-ஸ்தன வினிஹித..(ராதிகா கிருஷ்ணா..)

ஸ்தன வினிஹிதமபி ஹாரம் உதாரம்
ஸா மனுதே க்ருஸதனு ரிவபாரம்

மார்பில் அணிந்துள்ள மெல்லிய ஆரத்தைக் கூட,  இளைத்த தேகத்தை (க்ருஸதனு:) உடைய அவள், பெரும் பாரமென நினைக்கிறாள்

ராதிகா க்ருஷ்ண ராதிகா தவ விரஹே கேஸவ

ஓ ராதையின் கிருஷ்ணா,கேஸவா,  உன்னைப் பிரிந்ததால் துக்கம் கொள்கிறாள் இந்த ராதை

ஸரஸமஸ்ருணமபி மலயஜ பங்கம்
பஸ்யதி விஷமிவ வபுஷி ஸஸங்கம்

மிருதுவாயும், குளிர்ச்சியாகவும், மலையில் பிறந்ததுமாகவும் உள்ள சேற்றைப் போன்ற சந்தனத்தைக் கூட விஷமோ என்று சந்தேகத்துடன் பார்க்கிறாள்(ராதிகா)

ஸ்வஸித பவனம் அனுபம பரிணாஹம்
மதன தஹனமிவ வஹதி ஸதாஹம்

அவளுடைய அசாதாரணமான அளவு நீண்ட மூச்சுக் காற்றை, மன்மதனை எரித்த தீயைப் போல, அனலாய் தகிப்பதாக உணர்கிறாள் (ராதிகா)

திஸி திஸி கிரதி ஸஜலகண ஜாலம்
நயன நளினமிவ விகளித நாளம்

தண்டிலிருந்து பிரிந்த கருந்தாமரையைப் போன்றும், கண்ணீரால் நிறைந்தும் இருக்கும் அவள் கண்களின் பார்வையை எல்லா திசைகளிலும் சுழல விடுகிறாள்(தேடுகிறாள்)-ராதிகா

நயன விஷயமபி கிஸலய தல்பம்
கலயதி விஹித ஹுதாஸன கல்பம்

அவள் பார்வை படும் இடத்தில் இளம் தளிராலான படுக்கை இருந்தால் கூட அதை நெருப்பால் ஆனதாக சந்தேகத்துடன் பார்க்கிறாள்(ராதிகா)

த்யஜதி ந பாணி தலேன கபோலம்
பால ஸஸினமிவ  ஸாயம் அலோலம்

அவள் சாயங்காலத்தில் தெரியும் நகராத இளம் சந்திரனைப் போன்ற கன்னத்திலிருந்து தன் கையை எடுப்பதேயில்லை(அல்லது சாயங்காலம் தெரியும் இளம் சந்திரனைப்  போல நகர்வதேயில்லை)

ஹரிரிதி  ஹரிரிதி ஜபதி  ஸகாமம்
விரஹ விஹித மரணேவ நிகாமம்

தன் விரஹத்தாலேயே மரணிக்கப் போகிறார் போல, 'ஹரி, ஹரி..' என்றே எப்போதும் விடாமல் ஜபித்துக் கொண்டிருக்கிறாள்

ஸ்ரீ ஜயதேவ  பணிதமிதி கீதம் 
ஸுகயது கேசவபதம் உபநீதம்

ஸ்ரீ ஜயதேவரால் இயற்றப்பட்ட இந்தப் பாடல், கேசவனின் பாதத்தை அடைந்தோர்க்கு சுகம் அளிக்கட்டும்(ராதிகா..)

கே.எஸ். சித்ரா பாடியது:

https://www.raaga.com/play/?id=47150