
ஆழ்கிணறு பாழும் தான் உள்ளிருந்து கேட்டது ஒரு மெல்லிய விசும்பல் அநாதி காலமாய் அங்கேயே நின்றொலிப்பதைப் போல.. கூர்மை கொள்ள விசும்பல்கள் கோர்த்துக் கொண்டு உண்டானது ஓர் நீளழுகை கெண்டைக் கால் மயிர் சிலிர்க்க ஒளியே துணையாய் அருகணைய சட்டென நின்றது ஓலம் பின் கேட்டது மெல்லிய நகைப்பொலியா