சுழற்பாதை

முன்
உனைப் பார்த்த போது
இது
இப்படி
நிகழும்
என்றறிந்திருக்கவில்லை

இதோ
இவ்வளைவு
திரும்பியதும்

அதேயிடத்தில்

மீண்டும்
உனைப்
பார்க்கும் போது

என்னென்ன 
நிகழ்ந்திருக்கும்

அறிவதற்கில்லை

வளைவிலிருந்து
வளைவுக்காய்
வளைந்து வளைந்து
செல்கிறது
விழியற்றவனின்
சுழற்பாதை