கை விளக்கின் சிறு வெளிச்சம்

ஒன்றோ
இரண்டோ
அடி எடுத்து வைக்க

என்னோடே பயணிக்கும்
என்
கை விளக்கின்
சிறு வெளிச்சம்

அப்பால்

பள்ளமோ
பழுதோ
பாம்போ

மெல்ல மெல்ல 
நடக்கும் 
இப்பயணத்தில்

விழுவதற்கும்
எழுவதற்கும்

ஒரு அடி தான்
என்றால்
எத்தனைத் தொலைவு