ஒளிருலகம்

எண்ணியதும்
அது
கால் முளைத்து
சிறகு கொண்டு
அந்தரத்தில் 
நிலை கொள்கிறது
அவருள் 
புக

திறந்திருந்தால்

எங்கெங்கிலும்

அந்தரத்தில் ஆடும்
ஆயிரம் கோடி 
மின்மினிகளாலான
ஒளிருலகின்
பெருந்தரிசனம்