வாலை

சீதையல்ல 
உம் விதிகளுக்காய்
எரி புக

அதனின்று எழுந்தவள்
விதி சமைப்பவள்
பேரரசி நான்

இம்முறை

வாலையாய் வருகிறேன்
உம்மோடு
விளையாட