சிறகு முளைத்தவை

நீண்ட
பெரும்
கரும்பாதை

அங்கங்கே
விழியாய்
ஒளிரும்
சிறு துளைகள்

துளைக்கு துளை
இறகு முளைத்த
ஒற்றைக் கண்கள்

அவற்றின்
மீதேறி
முன்னும் பின்னுமாய்
சுழன்று 
பறந்து

பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
அனைத்தையும்
எப்போதும்