தளும்புதல்

எங்கும்
பரந்திருக்கும் 
ஒன்று

இங்கே
இதனூடே
ஊற்றெடுக்கிறது

மெலிந்திருப்பதாலா
நெகிழ்ந்திருப்பதாலா
அனுமதிப்பதாலா
ஒத்திசைவதாலா
எதிரொலிப்பதாலா
அல்ல
நிரம்பித் தளும்புவதாலா