புறப்பாடு

மலர் கிரீடம் சூட்டினர்
தோள் நிறைய மாலைகள்
பட்டுச் சேலை
மகிழ்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்

பின்
ஒவ்வொன்றாய் அகற்ற

அப்போதும்
மினுங்கியது
அதே புன்னகை 

நள்ளிரவு 
இருளில் 
புன்னகை மறைய
'ஹூம்' என்கிறாள்
அடிக்குரலில்
எழுகிறது அவள்
வாகனம் புறப்படத் தயாராய்