மிதந்து செல்பவை

மிதந்து செல்லும் அதற்கு
கண்ணீர் துளிர்த்தது
கரை நோக்கி
செலுத்தப்பட்டதும்

மணித்துளி தொலைவில்
சுழலிருப்பது
அறியாது

சேர்ந்ததோ தன் வீட்டு முற்றத்தில் மலர் கோலம் போடப் போகும் அவள் காலடியில்