இருக்கை

நானே உதிர்கிறேன்
என்று சொல்லியிருந்தாலும்

நீ உதிர்த்திருக்கலாமா?

எத்தனைக் காலம் நாம் சேர்ந்திருந்தோம்

அறிவேன்
புதுத் தளிர் பச்சென்றிருக்கும்

இருப்பினும்..

உடனே என்னிடத்தை நிரப்பி விடாதே

சில காலம் காலியாக வைத்திரு

தரை தொட்டதும்
என் இருக்கை
நானின்றி இருப்பதை
மல்லாந்து கிடக்கும் வரை
பார்த்துக் கொள்கிறேன்