லலிதா ஸஹஸ்ரநாமம்-தமிழில்(501-600)

गुडान्नप्रीतमानसा
gudanna pritamanasa
வெல்லம் சேர்த்து செய்த அன்னத்தை விரும்பும் மனமுடையவள்

समस्तभक्तसुखदा
Samasta bhakta sukhada
எல்லா பக்தர்களுக்கும் சுகத்தை அளிப்பவள்

लाकिन्यम्बास्वरूपिणी
lakinyamba svarupini
லாகினி என்னும் யோகினியின் உருவில் இருப்பவள்

स्वाधिष्ठानाम्बुजगता
Svadhishtanambujagata
ஸ்வாதிஷ்டானத்தில் உள்ள ஆறு தள பத்மத்தில் அமர்பவள்

चतुर्वक्त्रमनोहरा
chaturvaktra manohara
நான்கு அழகிய முகங்களைக் கொண்டவள்

शूलाद्यायुधसम्पन्ना
Shuladyayudha sampanna
சூலம் முதலான ஆயுதங்களை தரித்தவள்

पीतवर्णा
pitavarna
மஞ்சள் நிறத்தவள்

अतिगर्विता
atigarvita
அதிக கர்வம் கொண்டவள்

मेदोनिष्ठा
Medhonishta
உயிர்களில் உள்ள கொழுப்பில் நிலை கொள்பவள்

मधुप्रीता
maduprita
தேனை விரும்புபவள்

बन्धिन्यादिसमन्विता
bandinyadi samanvita
பந்தினி முதலான சக்திகளோடு கூடி இருப்பவள்

दध्यन्नासक्तहृदया
Dadyannasakta hrudaya
தயிர் சேர்த்த அன்னத்தை விரும்பும் இதயம் கொண்டவள்

काकिनीरूपधारिणी
kakini rupadharini
காகினி என்னும் யோகினியின் உருவைத் தரித்தவள்

मूलाधाराम्बुजारूढा
Muladharambujarudha
மூலாதாரம் என்னும் தாமரையில் அமர்ந்தவள்

पञ्चवक्त्रा
panchavaktra
ஐந்து முகங்களை உடையவள்

अस्थिसंस्थिता
asthi samsthita
உயிர்களின் எலும்புகளில் அமைபவள்

अङ्कुशादिप्रहरणा
Ankushadi praharana
அங்குசம் முதலான ஆயுதங்களைத் தாங்கியவள்

वरदादिनिषेविता
varadadi nishevita
வரதா முதலிய சக்திகளால் சேவிக்கப்படுபவள்

मुद्गौदनासक्तचित्ता
Mudgaodanasaktachitta
பச்சைப் பயறால் செய்த உணவுகளை விரும்பும் மனம் கொண்டவள்

साकिन्यम्बास्वरूपिणी
sakinyamba svarupini
சாகினி என்னும் யோகினியின் உருவில் இருப்பவள்

आज्ञाचक्राब्जनिलया
Aagynachakrabja nilaya
ஆஞ்ஞா சக்ரம் என்னும் இரண்டு தள பத்மத்தில் இருப்பவள்

शुक्लवर्णा
shuklavarna
வெண்ணிறத்தவள்

षडानना
shadanana
ஆறு முகங்களைக் கொண்டவள்

मज्जासंस्था
Majjasamstha
எலும்பு மஜ்ஜையில் இருப்பவள்

हंसवतीमुख्यशक्तिसमन्विता
hamsavati mukhyashakti samanvita 
ஹம்ஸவதி என்னும் முக்கிய சக்தியோடு இருப்பவள்

हरिद्रान्नैकरसिका
Haridranaikarasika
மஞ்சள் சேர்த்த அன்னங்களின் ரசிகை

हाकिनीरूपधारिणी
hakinirupa dharini
ஹாகினி என்னும் தேவியின் உருவைத் தாங்கியவள்

सहस्रदलपद्मस्था
Sahasradala padmastha
ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருப்பவள்

सर्ववर्णोपशोभिता
sarvavarnopashobhita
அனைத்து நிறங்களிலும் ஜொலிப்பவள்

सर्वायुधधरा
Sarvayudhadhara
எல்லா ஆயுதங்களையும் தரித்தவள்

शुक्लसंस्थिता
shukla samsthita
சுக்லத்தில் இருப்பவள்

सर्वतोमुखी
sarvatomukhi
எல்லா திசைகளிலும் முகம் கொண்டவள்

सर्वौदनप्रीतचित्ता
Sarvaodana pritachitta
எல்லாவித உணவுகளையும் விரும்புபவள்

याकिन्यम्बास्वरूपिणी
yakinyanba svarupini
யாகினி என்னும் யோகினியின் உருவில் இருப்பவள்

स्वाहा
Svaha
ஸ்வாஹா என்னும் மந்திரமாய் இருப்பவள்

स्वधा
svadha
ஸ்வதா என்னும் மந்திரமாய் இருப்பவள்

अमतिः
amati
மதியீனமாக இருப்பவள்

मेधा
medha
மேதையானவள்

श्रुतिः
shrutih
வேதமாக இருப்பவள்

स्मृतिः
smruti
ஸ்மிருதியாக இருப்பவள்

अनुत्तमा
anuttama
தன்னை விட மேன்மையானவர் இல்லாதவள்

पुण्यकीर्तिः
Punyakirtih
புனிதமான புகழை உடையவள்

पुण्यलभ्या
punyalabhya
புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே லபிப்பவள்

पुण्यश्रवणकीर्तना
punyashravanakirtana
அவள் புகழைக் கேட்பவருக்கு புண்ணியம் அளிப்பவள்

पुलोमजार्चिता
Pulomajarchita
புலோமஜையால்(இந்திராணியால்) அர்ச்சிக்கப்படுபவள்

बन्धमोचनी
bandhamochani
பந்தங்களிலிருந்து விடுவிப்பவள்

बर्बरालका
barbaraalaka
அலை போன்ற கூந்தலை உடையவள்

विमर्शरूपिणी
Vimarsharupini
அர்த்த வடிவானவள்

विद्या
vidya
கல்வி வடிவானவள்

वियदादि जगत्प्रसूः
viyadadi jagatprasuh
'வெளி' தொடங்கி ஜகம் முழுவதையும் பிரசவித்தவள்

सर्वव्याधिप्रशमनी
Sarvavyadhi prashamani
எல்லா வியாதிகளையும் தீர்ப்பவள்

सर्वमृत्युनिवारिणी
sarvamrutyu nivarini
எல்லா இறப்புகளையும் நிவாரணம் செய்பவள்

अग्रगण्या
Agraganya
முதன்மையானவளாக நினைக்கப் படுபவள்

अचिन्त्यरूपा
achintyarupa
நினைக்க முடியாத ரூபம் கொண்டவள்

कलिकल्मषनाशिनी
kalikalmashanashini
கலியினால் உண்டாகும் பாவத்தை போக்குபவள்

कात्यायनी
Katyayani
'காத' என்னும் முனிவரின் மகளானவள்

कालहन्त्री
kalahantri
காலனை வதம் செய்பவள்

कमलाक्षनिषेविता
kamalaksha nishevita
தாமரைக் கண்ணனால்(விஷ்ணுவால்) சேவிக்கப்படுபவள்

ताम्बूलपूरितमुखी
Tambulapuritamukhi
தாம்பூலத்தால் நிறைந்த வாயை உடையவள்

दाडिमीकुसुमप्रभा
dadimikusumaprabha
மாதுளைப் பூவைப் போல் பிரகாசிப்பவள்

मृगाक्षी
Mrugashi
மான்விழி கொண்டவள்

मोहिनी
mohini
மோகம் கொள்ளச் செய்பவள்(மயக்குபவள்)

मुख्या
mukhya
முதன்மையானவள்

मृडानी
mrudani
மிருடனின் (சிவனின்) மனைவி

मित्ररूपिणी
mitrarupini
அனைவருக்கும் தோழியாய் இருப்பவள்

नित्यतृप्ता
Nityatrupta
எப்போதும் திருப்தி கொண்டவள்

भक्तनिधिः
bhaktanidhi
பக்தர்களின் பொக்கிஷமானவள்

नियन्त्री
niyantri
அனைவரையும் நியமத்தில் நடக்கச் செய்பவள்

निखिलेश्वरी
nikhileshvari
அனைவருக்கும் தலைவி

मैत्र्यादिवासनालभ्या
Maityradi vasanalabhya
மைத்ரீ(அன்பு/தோழமை/இயைந்திருத்தல்) முதலிய குணங்களால் கிடைப்பவள்

महाप्रलयसाक्षिणी
mahapralayasakshini
மஹா பிரளயத்தின் சாக்ஷியாய் இருப்பவள்

पराशक्तिः
Parashaktih
பராசக்தி (உச்ச ஆற்றல்)

परानिष्ठा
paranishta
உச்ச நிஷ்டை/இலக்கு

प्रज्ञानघनरुपिणी
pragynana ghanarupini
அடர்ந்த சுத்த ஞானத்தின் உருவானவள்

माध्वीपानालसा
Madhvipanalasa
மது பானத்தால் சோம்பியிருப்பவள்(எதையும் பெரிதாகக் கருதாதவள்)

मत्ता
matta
போதையேறியவள்

मातृकावर्णरूपिणी
matrukavarna rupini
எழுத்து வடிவானவள்

महाकैलासनिलया
Mahakailasa nilaya
மஹாகைலாஸத்தில் வசிப்பவள்

मृणालमृदुदोर्लता
mrunala mrududorlata
தாமரைத் தண்டைப் போன்று மிருதுவான கைகளை உடையவள்

महनीया
Mahaniya
மேன்மை பொருந்தியவள்

दयामूर्तिः
dayamurti
இரக்கத்தின்(அருள்) வடிவானவள்

महासाम्राज्यशालिनी
mahasamrajyashalini
மஹா சாம்ராஜ்யத்தை நடுத்துபவள்

आत्मविद्या
Aatmavidya
ஆத்ம ஞானமானவள்(சுயத்தைப் பற்றிய அறிவானவள்)

महाविद्या
mahavidya
பேரறிவானவள்

श्रीविद्या
shreevidya 
ஸ்ரீவித்யை ஆனவள்

कामसेविता
kamasevita
காமனால் சேவிக்கப் படுபவள்

श्रीषोडशाक्षरीविद्या
Shree shodashaksharividya
பதினாறு எழுத்துக்களைக் கொண்ட மந்த்ர வடிவானவள்

त्रिकूटा
trikuta 
பஞ்சதசீ மந்த்ரத்தின் மூன்று பகுதிகளாக இருப்பவள்

कामकोटिका 
kamakotika
காமனைத் தன்னொரு பகுதியாகக் கொண்டவள்

कटाक्षकिङ्करीभुतकमलाकोटिसेविता
Katakshakinkaribhuta kamala kotisevita
தன் பார்வையாலேயே சேவகம் செய்யும் கோடி லக்ஷ்மிகளை கட்டுப் படுத்துபவள்

शिरःस्थिता
Shirasthita
தலையில் இருப்பவள்

चन्द्रनिभा
chandranibha 
சந்திரனைப் போல ஜொலிப்பவள்

भालस्था
bhalastha
புருவங்களுக்கு நடுவில் இருப்பவள்

इन्द्रधनुःप्रभा
indra dhanuh prabha
வானவில்லைப் போன்று அழகானவள்

हृदयस्था
Hrudayastha
இதயத்தில் வசிப்பவள்

रविप्रख्या
ravi prakhya
சூர்ய ஒளியைப் போன்றவள்

त्रिकोणान्तरदीपिका
trikonantara dipika
முக்கோணத்தின் நடுவே உள்ள தீபம் போல ஒளி தருபவள்

दाक्षायणी
Dakshayani
தக்ஷ பிரஜாபதியின் மகளானவள்

दैत्यहन्त्री
daityahantri
தைத்யர்களை அழித்தவள் 

दक्षयज्ञविनाशिनी
dakshayagyna vinashini 
தக்ஷனின் யாகத்தை அழித்தவள்