அஷ்டபதி-7-மாமியம் சலிதா..(ஹரி ஹரி..)

ஏழாவது அஷ்டபதி
ஸ்லோகம்

கம்ஸாரிரபி ஸம்ஸார வாஸனாபந்த ஸ்ருங்கலாம்
ராதாம் ஆதாய ஹ்ருதயே தத்யாஜ வ்ரஜ ஸுந்தரீ

கம்ஸனின் எதிரியான கண்ணனும் இவ்வுலக பந்தங்களால் கட்டப்பட்டு. ராதையையே மனதில் நினைத்துக் கொண்டு அழகியான வ்ரஜ பூமியையும் தியாகம் செய்தான்.

இதஸ்ததஸ்தாம் அனுஸ்ருத்ய ராதிகாம்
அனங்க பாண வ்ரண கின்ன மானஸ:
க்ருதானுதாப: ஸ களிந்த நந்தினீ
தடாந்த குஞ்ஜே விஷஸாத மாதவ:

மாதவன், ராதிகாவை இங்கேயும் அங்கேயுமாக தொடர்ந்து தேடி விட்டு, அனங்கனின்(மன்மதனின்) அம்பால் காயம்பட்டு துயரமும் தாபமும் கொண்ட மனதுடன், களிந்த மலையின் மகளான யமுனையின் தடத்தில் அமைந்த ஒரு குடிலில் அமர்ந்தான்.

கீழ்காணும் பாடல்கள் கண்ணனின் வாய்மொழியாக வருபவை:

மாமியம் சலிதா விலோக்ய வ்ருதம் வதூநிசயேன
ஸாபராததயா மயாபி ந வாரிதா அதி பயேன ஹரிஹரி

ஓ ஹரி, நிறைய யுவதிகளால் சூழப்பட்ட என்னைப் பார்த்து தான் அவள் சென்று விட்டாள்; என்னால் அவளுக்கு அபராதம் நடந்துள்ளதால், அதிகமான பயம் கொண்டு நான் அவளைத் தடுக்கவும் இல்லை.

(கண்ணனுக்கும் ஹரியே தெய்வம் என்பது மிகவும் கவித்துவமான கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்)

ஹதாதரதயா ஸா கதா குபிதேவ

புண்பட்டதால் அலக்ஷியத்துடன் கோபம் கொண்டவள் போல் அவள் சென்று விட்டாள்

கிம் கரிஷ்யதி கிம் வதிஷ்யதி ஸா சிரம் விரஹேண
கிம் தனேன ஜனேன கிம் மம ஜீவிதேன க்ருஹேண (ஹரி ஹரி)

அவளும் தான் என்ன செய்வாள், என்ன சொல்வாள், என்னிடமிருந்து வெகு காலம் பிரிந்திருந்து விட்டாள்; அவளில்லாத போனால் என் செல்வத்தாலோ, சொந்தங்களாலோ, இல்லத்தாலோ, என் உயிராலோ கூட என்ன பலன்(ஹரி ஹரி)

சிந்தயாமி ததானனம் குடிலப்ரு கோப பரேண
ஸோண பத்ம மிவோ பரி ப்ரமதாகுலம் ப்ரமரேண (ஹரி ஹரி)

அவள் முகத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்; அவளின் குனித்த புருவம் கோபத்தால் சுருங்கியிருப்பது, சிவந்த தாமரையைச் சுற்றி வட்டமிடும் வண்டுகளைப் போலுள்ளது(ஹரி ஹரி)

தாமஹம் ஹ்ருதி ஸங்கதாம் அனிஸம் ப்ருஸம் ரமயாமி
கிம் வனேனுஸராமி தாமிஹ கிம்வ்ருதா விலபாமி (ஹரி ஹரி)

நான் ஏன் அவளை வனத்தில் தேடுகிறேன்; ஏன் தேவையற்று பிரலாபித்துக் கொண்டிருக்கிறேன்; நான் அவளை எப்போதும் என் இதயத்திலேயே வைத்திருக்கிறேன்; அவளை சந்தோஷப் படுத்திக் கொண்டே இருக்கிறேன்(ஹரி ஹரி)

தன்வி கின்னம் அஸுயயா ஹ்ருதயம் தவா கலயாமி
தன்ன வேத்மி குதோ கதாஸி ந தேன தேனுனயாமி (ஹரி ஹரி)

ஓ அழகிய ராதே, அசூயையால் மனம் குமைந்து நீ சென்று விட்டாய் என நம்புகிறேன்; நீ எங்கு சென்றாய் என்றும் நான் அறிந்திலேன்; உன் முன் தலை தாழ்த்தி உன்னை அழைக்கிறேன்(ஹரி ஹரி)

த்ருஸ்யசே புரதோ கதா கதமேவ மே விததாஸி
கிம் புரவே ஸஸம்ப்ரமம் பரிரம்பணம் ந ததாஸி (ஹரி ஹரி)

என் முன்னால் நீ தோன்றுகிறாய்; பின் காணாமல் ஆகிறாய்; வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறாய்; ஏன் முன்பு போல் நீ என்னை இறுகத் தழுவக் கூடாது(ஹரி ஹரி)

க்ஷம்யதாம் அபரம் கதாபி த வேத்ருஸம் ந கரோமி
தேஹி ஸுந்தரி தர்ஸனம் மம மன்மதேன துனோமி (ஹரி ஹரி)

ஓ சுந்தரி, என்னை மன்னித்து விடு, மீண்டும் ஒரு போதும் இது போன்ற அபராதத்தை செய்ய மாட்டேன்; எனக்கு தரிசனம் கொடு; மன்மதனால் பீடிக்கப் பட்டிருக்கிறேன்(ஹரி ஹரி)

வர்ணிதம் ஜயதேவகேன ஹரேரிதம் ப்ரவணேன
கிந்து பில்வ ஸமுத்ர ஸம்பவ ரோஹிணீ ரமணேன

சமுத்திரத்தில் பிறந்த ரோஹிணி நக்ஷத்திரத்தின் கணவனான சந்திரனைப் போல, கிந்து பில்வம் என்னும் குலத்தில்(கிராமத்தில்) பிறந்த, ஹரியின் பக்தனான, ஜெயதேவகனால் இது வர்ணிக்கப்படுகிறது.

மற்றொரு விதமான (சில இடங்களில் தவறான) மொழிபெயர்ப்பு: