வீதி வீதியாய்..

அங்கு..

வேண்டியபோது உணவுண்ணலாகாது
பிடித்ததை உண்ணமுடியாது
கிடைத்ததை ருசித்துண்ணக் கூடாது
போதவில்லை என்ற சொல்லே கூடாது

மற்றவருக்கு பசியெடுக்க
இவர் நோன்பிருத்தல் வேண்டும்

ஏனெனில்
அவரிலையில் தான்
இவருணவு

அவருக்கு போதுமென்றால்
இவருக்கும் தான்

உணவென்ற கனவுமின்றி

அடிவயிற்றுக் கனலவிக்க

கிடைத்ததை உண்டு
நொடியில்
சுவையறிந்து
பசியும் நிறைந்து
உயிரும் தரித்தல் வேண்டும்

வீதி வீதியாய்..

விசித்திர
ஊமைகள் கொண்ட
விநோத ஊரது