அஷ்டபதி 6- நிப்ருத நிகுஞ்ச..(ஸகி ஹே)

ஸ்லோகம்:

கணயதி குண க்ராமம் பாமம் ப்ரமாதபி நேஹதே
வஹதி ச பரிதோஷம் தோஷம் விமுஞ்சதி தூரத:
யுவதிஷு வலத் த்ருஷ்ணே க்ருஷ்ணே விஹாரிணி மாம்வினா
புனரபி மனோ வாமம் காமம் கரோதி கரோமி கிம்

ஸகி, என் மனம் அவனுடைய குணங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறது; மறந்தும் கூட அவனிடம் கசப்பு கொள்ளவில்லை; அவனை நினைக்கும் போதெல்லாம் மனம் சந்தோஷமே கொள்கிறது; அவன் தோஷங்களையெல்லாம் தூரத்திலேயே விட்டுவிடுகிறது; யுவதிகளின் நடுவே, நான் இல்லாமல், மிகுந்த ஆசையுடன் விளையாடும் கிருஷ்ணனின் மேல் மீண்டும் மீண்டும் வழக்கத்தை மீறி மனம் காதலே கொள்கிறது, நான் என்ன செய்வேன்?

நிப்ருத நிகுஞ்ஜ க்ருஹம் கதயா நிஸி ரஹஸி நிலீய வஸந்தம்
சகித விலோகித ஸகல திஸா ரதி ரபஸ ரஸேன ஹஸந்தம்

ஒர் இரவில், தனியாய் இருந்த ஒரு கொடிப் பந்தலுக்கு நான் சென்ற போது, ரகசியமாய் மறைந்திருந்தான்; அவனைக் கண்டு நான் திடுக்கிட்டு எல்லா திசைகளையும் பார்த்தேன்; காதல் மிகுந்த புன்னகையை அளித்தான்

ஸகி ஹே கேசி மதன முதாரம்
ரமய மயா ஸஹ மதன மனோரத பாவிதயா ஸவிகாரம்

ஓ ஸகி, கேசியைக் கொன்றவனை, மன்மத பாவத்தோடு லீலைகள் செய்து தாராளமாக என்னுடன் களிக்கச் சொல்.

ப்ரதம ஸமாகமா லஜ்ஜிதயா படு சாடு ஸதைரனு கூலம்
ம்ருது மதுராஸ்மித பாஷிதயா ஸிதிலீக்ருத ஜகன துகூலம் (ஸகி ஹே)

முதல் சந்திப்பில் நான் மிகுந்த லஜ்ஜை கொண்டிருந்தேன்; சாமார்த்தியசாலியான அவன் நூறு நூறு நல்ல வார்த்தைகளால் என்னை அநுகூலமாக்கிக் கொண்டான்; மென்மையாகவும், இனிமையாயும், புன்னகைத்துக் கொண்டும் பேச ஆரம்பித்தேன், என் இடையிலிருந்து பட்டாடையை நழுவச் செய்கிறான்(ஓ ஸகி)

கிஸலய ஸயன நிவேஸிதயா சிரம் உரஸி மமைவ ஸயானம்
க்ருத பரிரம்பண சும்பனயா பரிரப்ய க்ருதாதர பானம் (ஸகி ஹே)

இளம்புல் மெத்தையில் படுத்திருக்கும் என் மார்பின் மேலேயே தலை வைத்து தூங்குகிறான்; என்னை முத்தமிட்டு, ஆரத் தழுவி, அதர பானம் செய்கிறான்.(ஓ ஸகி)

அலஸ நிமீலித லோசனயா புளகாவலி லலித கபோலம்

ஸ்ரமஜல ஸகல களே பரயா வர மதன மதாத் அதிலோலம் (ஸகி ஹே)

களைப்பினால் மூடும் விழி கொண்டிருந்தேன், அவன் கன்னங்கள் புளகாங்கிதம் கொண்டிருந்தன; உடல் வியர்த்திருந்தேன்; சிறந்த காதல் உணர்வு கொண்டிருந்தான்(ஓ ஸகி)

கோகில கலரவ கூஜிதயா ஜித மனஸிஜ தந்த்ர விசாரம்
ஸ்லத குஸுமாகுல குந்தளயா நக லிகித கன ஸ்தனபாரம் (ஸகி ஹே)

குயிலைப் போல கூவிக் கொண்டிருந்தேன்; பூக்கள் காய்ந்து கலைந்திருந்த பின்னல் கொண்டிருந்தேன்; மன்மதக் கலையை வென்றவன்; நகத்தால் என் மேல் எழுதினான்.(ஓ ஸகி)

சரண ரணித மணி நூபுரயா பரிபூரித ஸுரத விதானம்
முகர விஸ்ருங்கல மேகலயா ஸ கசக்ரஹ சும்பன தானம் (ஸகி ஹே)

கால்களில் அணிந்திருந்த கொலுசு சப்தமிட்டது;என் ஆசைகள் பூர்த்தியாயின; இடையிலிருந்த மேகலை கழன்று விழுந்தது; என் கூந்தலைப் பற்றி முத்தமிட்டான்.

ரதிஸுக ஸமய ரஸாலஸயா தர முகுளித நயன ஸரோஜம்
நிஸ்ஸஹ நிபதித தனுலதயாமதுசூதனம் உதித மனோஜம் (ஸகி ஹே)

களைப்பினால் கொடியைப் போல் துவண்டு கிடந்தேன்; தாமரை போன்ற கண்களை மூடிக் கிடந்தான்; மது சூதனனுக்கு காதல் உதித்தது.(ஓ ஸகி)

ஸ்ரீ ஜய தேவ பணிதமிதம் அதிஸய மதுரிபு நிதுவன ஸீலம்

ஸுகமுத் கண்டித ராதிகயா கதிதம் விதநோது சலீலம் (ஸகி ஹே)

ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட மதுசூதனின் இந்த அதிசய லீலைகள், பரவசமடைந்த ராதையால் சொல்லப்பட்டது; இது எல்லோருக்கும் ஆனந்தத்தை அளிக்கட்டும்.(ஓ ஸகி)

மற்றொரு விதமாக மொழிபெயர்க்கப்பட்ட வடிவம் கீழே: