
உச்சி வெயிலில் அச்சாலை கரு நாகம் போல் மின்னிக் கொண்டிருந்தது சொடுக்கி விட்ட சாட்டையாய் கடந்து கொண்டிருந்தது அது நொடி நேரம் வேகமாய் வந்த வண்டியில் சிக்கிக் கொண்டது ஒன்றில் அடிபட்டு மற்றொன்றோடு சுழன்று இன்னொன்றில் நசுங்கி.. புரட்டிப் போட்டு விட்டன வண்டிச் சக்கரங்கள் கூழான உடம்பின் ஒரு நுனியில் தலை உள்ளேயும் வெளியேயுமாய் நாக்கு ஒரு பயனுமின்றி வாலோ புழுவைப் போல உக்கிர வெயிலுக்கு என்ன தெரியும் அது மேலும் உக்கிரமாய் பொசுக்கிக் கொண்டிருந்தது