ஒப்பனை

புருவம் திருத்தி
கண்ணுக்கு மையெழுதினாள்

மூக்கை எடுப்பாக்கி
கன்னத்து நிறம் கூட்டினாள்

உதட்டுக்குச் சாயம்

பின்
கூடத்தின் முதற் கண்ணில்
பார்த்துக் கொண்டாள்

இரண்டாவது
மூன்றாவதிலும் கூட

ஒளி கூடியதா

உள் சுருங்க

மீதமிருந்த இரவு முழுதும்
ஒப்பனை
மட்டும் தனியாய் தொங்கிக் கொண்டிருந்தது