குளிர்

அது 
என்னைத் 
தன் கை விரல் நீட்டி
தொட்டதும்

விறைத்துவிட்டேன்

உள்ளிருந்து ஒரு நடுக்கு
உடலெங்கும்..

உதடுகள் காய்ந்து
கண்கள் குளமாயின

மூச்சே விட முடியாது
அழுத்திப் பிடித்தது நெஞ்சை

இனி
தூரத்திலாவது
தெரியுமா

ஒரு 
துளி வெம்மை

தெய்வம்