அறிவாயா..

உன் ஆடையின் நுனியைப்
பற்றிக் கொள்ளவே 
விழைகிறேன்

நீ வரும் பாதையில் எதிர் வரவே
நினைக்கிறேன்

எப்படியும்
என் குரலை 
கேட்டுவிடுவாயென்றே
பாடுவதாக 
வாயசைக்கிறேன்

என் கொலுசொலியை
நீ
கேட்கவேண்டுமென்றே
ஆடுவதாக
நினைத்துக் கொள்கிறேன்

நீ விட்டெறிந்த கல்லே
என் தலையின் பானையை
உடைத்ததாக 
எண்ணிக் கொள்கிறேன்

ஒவ்வொரு முறை
மூழ்கி எழும்போதும்
என் ஆடை
தொலைந்ததாகவே
பதற்றம் கொள்கிறேன்

என்றாவது
என்னையும்
நீ
அறிவாயா