அருகருகே..

அவர்கள் இருவரும் 
அருகருகே அமர்ந்திருந்தனர்

அவள் முலையும் தொடையும்
அவனை அழுத்திக் கொண்டிருந்தன

அவனுக்கு மூச்சு முட்டியது
அவ்விடம் முழுவதும்
அவள் உடல் வாசம்

தலை குனிந்து அமர்ந்திருந்தாள்
புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளா

அவனுக்கு வலித்தது

ஒரு அங்குலம் நகரவும் இடமில்லை

மனதுக்குள் நெளிந்து கொண்டிருந்தான்
கை கால்களை விடுவித்துக் கொள்வதாய் 
கற்பனை செய்து கொண்டான்

நிஜத்திலும் நகர்ந்தனவா

அவள் தலை நிமிர்ந்து
அவனைப் பார்த்தாள்

இப்பொழுது அவன் வலி 
அவள் கண்களில்..