எதை எடுப்பது

இழுத்துக் கட்டிய முரசுத் தோல்
விம் விம்மென்று அதிர்ந்து கொண்டிருந்தது

கடந்து செல்லும் காற்றினால்
இன்னும் தொடவே செய்யாத கையினால்..

கோலெடுத்து 
அடிக்கவே வேண்டாம்
அருகில் 
கொண்டு சென்றாலே 
சிலிர்த்தெழுந்தது அது

அசைவனைத்தையும்
குதித்து குதித்து
உரத்த ஒலியாக்கியது

ஒலி மிக மிக
அடியும் மிகுந்தது

பின்னொரு நாள்
கட்டு தளர
அது
ஊமையாய்
மூலையில் அமர்ந்தது

அடித்து அடித்து
ஊமையாக்கிய
இவ்வெற்றியைச் சொல்ல

வரிசையாய்
மூலையில் அமர்ந்திருக்கும்
அத்தனை முரசுகளில்

எதை எடுப்பது..