எரித்தடம்

வண்டி வர 
இன்னும்
நேரமிருந்தது

நேற்றிரவு
விசும்பலோடு வந்த
தீனக்குரல்
காதிலேயே
ஒலித்துக் கொண்டிருந்தது

அத்திக்கை
பார்க்கவே விடாது..

கையை இறுகப் பற்றி
இழுத்துச் சென்று விட்டிருந்தாள்
அம்மை

இப்போது..

குப்பைத் தொட்டியின்
பின்னால்
ஓர்
இளம் பித்தி

சிடுக்குப் பிடித்த தலையும்
நிலைக்குத்திய பார்வையுமாய்

தீப்பிடித்தது 
போல் 
கை
எரிய

அம்மை பிடித்த தடத்தின்
நகக் கீறல்
மீண்டும்
திறந்து கொண்டிருந்தது