சாத்தன்

முதற் புலரியின் ஓசையாய்
விழித்தெழக் கூவுகிறாய்

எரி சுமந்தோய்
கழுகையும் வெல்கிறாய்

உச்சிக் கூடு கட்டி
உயிர் புரப்பாய்

கரியன்
வலியன்
சாத்தன் நீ