
மாற்றி மாற்றி வைத்துக் கொண்டே இருந்தது அகலவே அதற்கு மனமில்லை பீறிட்டு வரும் நீரூற்று அதன் மென்பாதங்களை என்ன செய்ததோ அழுத்த அழுத்த கூடும் விசையில் உன்மத்தம் கொண்டது மேலும் அழுத்த முற்றிலும் அடங்கி பின் மற்றொரு திசையில் பீறிட பித்துக் கொண்ட அப்பூனை இன்னும் இன்னும் கிளர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கிறது