கேள்வி

எத்தனை அழகான கேள்வியிது
உனக்கு என் ஆயிரம் முத்தங்கள்

மயான மௌனம் 
கொண்ட இரவுகளில்

அதல பாதாளத்திலிருந்து
என் குரல் எழுகையில்

மறந்து விடாதிருக்க 
எனக்கு நானே பேசுகையில்

புண்வாயைத் தொடும்
வலியை 
மறக்க எண்ணுகையில்

என்னோடு நானே 
இருக்க அஞ்சுகையில்

பற்றிக் கொள்ள
ஒரு கேள்வியை 
அளித்து விட்டாய்

ஒரு வாழ்வையே
இதற்கு பதிலாய் 
நான்
வாழ்ந்து விடுவேன்

ஒரே ஒரு முறையாவது
இது கேட்கப்பட்டதே..