
அன்பு செய்வது ஒன்றும் கடினமல்ல உயிராக நேசிக்கலாம் பித்துக் கொண்டு காதலிக்கலாம் மிச்சமின்றி முழுக்க முழுக்க தன்னைத் தரலாம் வானளாவ உயர்த்தி வைக்கலாம் திசையெங்கும் உரக்கக் கூவலாம் எதிரொலிக்கக் காத்திருந்தால் மீண்டும் முயன்றால் மீண்டும் மீண்டும் முயன்றால் மௌனமே பேரிடி உயரமும் ஆழமும் அடர்த்தியுமே எதிரிகள் இனிப்பென்றால் வலியே தான்