பாடல்

அடர் காடு
பல வண்ணப் பச்சை

மரத்திலிருந்து மரம்
தாவித்தாவி
பார்க்காதவரிடமும்
மறைந்திருந்து
ஒவ்வொரு முறையும்
புதிது புதிதாய்
பாடி மகிழ்கிறது
ஒரு பறவை

தன்னைப் போன்றே
பறவைகள் சூழ
ஒவ்வொன்றும் ஒரு
ராகம் பாட
பெரும் பாடலொன்றின்
ஒரு வரியையே
மீண்டும் மீண்டும்
பாடித் திரிவதை
அறியுமா
அப்பறவை