ராதே..ராதே..

தரையெங்கும் கொட்டிக் கிடந்தன
மரமல்லிப் பூக்கள்
நட்சத்திரங்களாய்

கை மறையும் அந்தி

மினுங்கியது 
அவள் 
கண் நீலம்

மிச்சமிருந்த செம்மையையும் 
பூசியிருந்த
நீலவானம்

காத்திருந்தாள்
ராதையாய்

கண்ணனோடு
படகிலாட

'ராதே..ராதே..'
உன்மத்தம் கொண்டு
இப்போதும்
சுழன்றாடுவரோ