
ஐந்து வயது நான் சாக்லேட்டை அத்தனை விரும்பியிருக்க வேண்டாம் மிரட்டல் என்றால் என்னவென்றாவது தெரிந்து கொண்டிருக்கலாம் ஒவ்வொரு முறையும் புகைமூட்டமான அந்நினைவுகள் என்னை உலுக்கிப் போடுகின்றன வாய்விட்டு சிரிப்பதற்கோ விளையாடுவதற்கோ என்னால் முடிவதில்லை தடியால் அடித்த பழம் நிரந்தர ஊனம் யாராவது எனக்குச் சொல்லியிருக்கலாம் பால்மணம் இன்னும் மறக்காவிடினும் பரவாயில்லை கவனமாக இருக்க வேண்டிய உலகமிது கவனமென்றால் என்னவென்றே தெரியாவிட்டாலும்