
எதிரே பார்க்கவில்லை சட்டென்று வழுக்கி விட்டது ஒரு அடி அதிகம் வைத்து விட்டேன் போல கண்ணிமைக்கும் நேரத்தில் நிலம் அருகே வந்து விட்டது உடனே வலிக்க வில்லை இளிப்பு தான் வந்தது யாரும் பார்க்கும் முன் எழுந்து விட வேண்டும் கையில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டேன் மெல்ல எழுந்து யாரையும் பார்க்காமல் அங்கிருந்து நகர ஆரம்பித்தேன் வலி.. இன்னும் சில காலம் இக்காயத்துடன் தான் வாழ்க்கை 'தடயமின்றி ஆறி விட வேண்டும்'' விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தேன்