கிள்ளை வளைவாய்

நரையோடிய தலையை
கையால் நீவி முடிந்தாள்

முகத்தைத் தலைப்பால்
அழுந்த துடைத்த படி
கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்

வலித்த முட்டியை நீவிக் கொண்டே
பழைய படத்தைப்
பார்க்கலானாள்

ஆனால்
இம்முறை 
அக்காட்சி
அதிர்வின்றிக் கடந்தது

'திக்'கென்றிருந்தது அவளுக்கு

அவசரமாய் காட்சியை மாற்றினாள்

இப்போது
கிள்ளையொன்று
வளைந்த தன் அலகால்
ஒரு வேப்பம்பழத்தை
கொரித்துக் கொண்டிருந்தது