சாயம்

அப்போது தான் 
கொண்டு வந்து
கிடத்தியிருந்தார்கள் 
அது
கிடைப்பதற்குள் பரிதவித்து விட்டான்
அருகிருந்தவர் செய்ய வேண்டியது அனைத்தையும் செய்திருந்தனர் நிலை குத்திய பார்வையோடு அமர்ந்திருந்தான் ஜன்னலில் தலை சாய்க்க ஏதோ நகர்ந்தது திரும்பிப் பார்த்தான்
அவசரமாய் கிளம்புமுன் முழுவதுமாய் முடிக்காத விளிம்பில் அவள் உதட்டுச் சாயத்தை பூசிக் கொண்ட
ஒரு காப்பிக் கோப்பை