
மெல்லிய குளிர் பெரிய அறை நீளமான சிவப்பு கம்பளம் விளக்குகள் ஒவ்வொரு விளக்கின் கீழும் ஒரு சித்திரம் அதன் எதிரில் ஒரு இருக்கை இருக்கைகளில் அமர்ந்து சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர் படியெடுத்துக் கொண்டிருந்தனர் சிலர் அறையின் மூலையில் அமர்ந்திருந்தான் அவன் கடந்து செல்லும் கால்கள் ஒவ்வொன்றாய் பார்த்தபடி தன்னுடையதின் எதிரே தயங்கி நிற்க அவைகளைக் கோரிய படி கடைசியில் ஒருத்தி அதனெதிரே அமர்ந்தாள் திரும்பியும் பாராமல் அவன் அங்கிருந்து அகன்றான்