கோபுரம்

கோபுரத்தின் மேல் தளத்தில்
ஐந்தடி உயரத்தில் அவள்
இளஞ்சிவப்பு வண்ணத்தில் ரவிக்கை
பச்சை வண்ணத்தில் சேலை

மீண்டும் உதட்டைப் பார்த்தான்
அதன் கீழ் ஒரு மச்சம்
மையால் 
தொட்டு வைத்தான்

மீனாட்சியாய்
அவளை அங்கேயே விட்டு விட்டு சாரத்தில் கால் வைத்து மெல்ல இறங்கினான் கடைசியாய் அவன் கண்ணில் பட்டது அவள் கால் மருதாணி 'நாளை சாரத்தை பிரித்து விட வேண்டும்' கை கால் கழுவி பேசிக் கொண்டே அவர்கள் அங்கிருந்து அகன்றனர்