பித்தம்

நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது
ஏன் என்று புரியவில்லை
தலை தூக்கிச் சுற்றிலும் பார்க்கிறேன்

வாயிலைத் திறந்து கொண்டு
அப்போது தான் நுழைகிறாய்

முன் வரிசையில் அது நீயா
தூக்கி வாரிப் போட்டது

உற்றுப் பார்க்கிறேன்
பக்கவாட்டில் மட்டும்
உன் சாயல்

கண்ணருகில்
கன்னத்தில்
தோளில்
நடையில்
குரலில்

எங்கெங்கிலும்
கண் பார்க்குமுன்
உன்னை
மனம் பார்த்து விடுகிறது

பித்தம் முற்றுமுன் சொல்
எனக்கு
நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன?