ஆழம்

சுத்த ஆகாசத்தை
பிரதிபலிக்கும்
நீலத் தடாகம்

அருகில் சென்றதும்
தெளிவாய்த் தெரிந்தன
அடியின்
கற்களும் பாறைகளும்
வண்டலும் சேறும்

கல்லொன்று எரிந்தனர்
உண்டானது நீர்க்கோலம்

ஆழம்
சிலகாலம்
திரைக்குப் பின்
மறைந்தது 

கலங்கித் தெளிய
மீண்டும் நிஜ தரிசனம்

ஆழத்தின்
அத்தனை நூறு கற்களோடு
இக்கல்லும் சென்று சேர்ந்திருக்கும்
மோனத்தில் கலந்திருக்கும்

தடாகமும் ஒரு நூல்
உயர்ந்திருக்கும்