
பண்டொரு சிலை இருந்தது அழகி என்றால் அவள் தான் என்றனர் சுற்றிச் சுற்றி வந்து ரசித்தனர் அவளிலிருந்து பல சிலைகள் செய்தனர் பின் ஒரு நாள் பெரும் மின்னல் அவள் கண் திறந்தது மூச்சு விட ஆரம்பித்தாள் தன் சொற்களைத் தானே சொன்னாள் கையும் காலும் மனமும் அவள் சுவாதீனமாயின தன் திசையைத் தானே தேர்ந்தாள் வாழ அங்கிருந்து நகர்ந்தாள் உயிர் கொண்ட அப்பேரழகி