தங்கக் கூண்டு

 ஒருவருக்கு பிறப்பு
 ஒருவருக்கு பதவி
 சிலருக்கு அறிவு
 சிலருக்கு நுட்பம்
 ஒரு சிலருக்கு மதிப்பு
 வேறு சிலருக்கு புகழ்
 பலருக்கு செல்வம்
 அல்லது அழகு

 அவரவருக்கு
 அவரவருக்கான
 தங்கக் கூண்டு