நானும் என் தனிமையும்..

If the video doesn’t play, please click on the title of the video

1982-ல் யஷ் சோப்ராவால் எடுக்கப்பட்ட ‘சில்சிலா’ என்ற படத்தில் வந்த மிக அழகிய பாடல் இது. இதில் கவிதையும் பாடலும் மாறி மாறி வருகிறது. கிட்டத்தட்ட cult status கொண்ட பாடல் இது.

இது பண்டிட் சிவகுமார் ஷர்மாவும், பண்டிட் ஹரி பிரஸாத் சௌராசியாவும் இணைந்து ஷிவ்-ஹரி என்ற பெயரில் இசையமைத்த பாடல் . ஜாவித் அக்தர் இப்பாடலை எழுதியிருக்கிறார். லதா மங்கேஷ்கர் இப்பாடலைப் பாடியுள்ளார். அமிதாப் தன் குரலில் கவிதையைச் சொல்லியுள்ளார்.

Addictive-ஆன பாடல். இப்பாடலைக் கேட்க ஆரம்பித்தால் வேறொன்றும் செய்யத் தோன்றாது.

பஹாடி ராகத்தில் அமைந்துள்ளது இப்பாடல்.

வரிகள்:
நானும் என் தனிமையும்
அடிக்கடி பேசிக் கொள்வோம்
நீ இருந்தால் எப்படி இருக்கும்
நீ இதைச் சொல்வாய், அதைச் சொல்வாய்
இதைக் கண்டு வியப்பில் ஆழ்வாய்
அதைப் பற்றி எவ்வளவு சிரிப்பாய்
நீ இருந்தால் இப்படி இருக்கும்
நீ இருந்தால் அப்படி இருக்கும்
நானும் என் தனிமையும்
அடிக்கடி பேசிக் கொள்வோம்

எங்கே
வந்து விட்டோம் நாம்
அருகருகே நடந்து நடந்தே
உன் அணைப்பில் 
என் உடலும் உயிரும் உருகுகின்றன
எங்கே
வந்து விட்டோம் நாம்
அருகருகே நடந்து நடந்தே

இது இரவா
இல்லை உன் கூந்தலா
இது நிலவா
இல்லை உன் வளையா
நக்ஷத்திரங்களா 
இல்லை உன் சேலையா
இது காற்றின் ஒரு புரியா
இல்லை உன் உடலின் வாசமா
இலைகளின் சரசரப்பா
இல்லை நீ சொல்லும் இரகசியமா
நினைத்துப் பார்க்கிறேன்
எப்போதிலிருந்தோ எனக்குத் தெரியும்
நீ இல்லை
எங்கும் இல்லை
ஆனால் என் இதயம்
சொல்கிறது
நீ இங்கே தான் இருக்கிறாய்
எங்கோ இருக்கிறாய்

நீ உடல் நான் உன் நிழல்
நீ இல்லையென்றால் நானும் இல்லை
என் காதலே
நீ எங்கேயோ நானும் அங்கே
நாம் சந்திப்பதற்கே விதிக்கப்பட்டிருக்கிறோம்
இதே பாதையில் செல்வோம்

என் மூச்சு வாசம் கொள்கிறது
சந்தனத்தை அரைத்தது போன்று
உன் காதல் நிலவு
என் இதயம் முற்றம் 
இன்னும் மென்மையாகி விட்டது
என் அந்தி சாய சாய

கடினமானது இந்த நிலைமை
இங்கும் அங்கும்
தனிமையின் இந்த இரவு
இங்கும் அங்கும்
சொல்வதற்கென்னவோ நிறைய உள்ளது
ஆனால் யாரிடம் சொல்ல

எப்போது வரை இந்த மௌனம்
இந்தப் பொறுமை
மனம் சொல்கிறது இவ்வுலகின்
ஒவ்வொரு விதியையும் மீற
நம்மிடையே உள்ள சுவற்றை
இன்றே இடித்து விடலாம்
ஏன் மனதுக்குள் மருக வேண்டும்
எல்லோருக்கும் சொல்லி விடலாம்
ஆம் நாங்கள் காதலிக்கிறோம்
காதலிக்கிறோம்

இப்போது மனதில் இந்த வார்த்தையே
இங்கும் இருக்கிறது அங்கும் 

எங்கே
நாம் வந்து விட்டோம் 
அருகருகே நடந்து நடந்தே