உயிருள்ளவை

அவை
ஒவ்வொன்றும்
உயிருடன் தான் வாழ்கின்றன

அத்திக்கில்
பார்ப்போரைக் கூட
எட்டிப் பிடித்து
பித்தாக்குகின்றன

உறக்கத்தையும்
கனவையும்
கண்ணீரையும்

சூடிய

சிரிக்கும்
கல்லறைகள்